தொகுதி பங்கீடு குறித்து இறுதி கையொப்பமிட ஜனவரி 20ம் தேதி பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வருகிறார்
சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.) ஜனவரி 20ம் தேதி பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத
Piyush


சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.)

ஜனவரி 20ம் தேதி பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் முன்கூட்டியே தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன. பிரசாரம், கூட்டணி பேச்சுவார்த்தை, நலத் திட்டங்கள் என அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது

இந்நிலையில் பியூஷ் கோயல் சென்னை வரும் அன்றைய தினமே அதிமுக பாஜக இடையேயான தொகுதி பங்கீடு கையெழுத்தாகிறது.

மேலும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கான கூட்டணி - தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்து உடன்படிக்கை கையெழுத்தாகும் எனவும்

எந்தந்த தொகுதிகள் என்பது பேச்சுவார்த்தை மூலம் இறுதி செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ