Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 09 ஜனவரி (ஹி.ச.)
சேலம் அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பாரதி நகரை சேர்ந்த வர்ஷினி என்ற 22 வயது இளம் பெண் இறுதியாண்டு மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். இந்த இளம் பெண் தனது கல்லூரி தோழிக்ளுடன் நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி கல்லூரி படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், ஊருக்கு சென்றிருந்த வர்ஷினியின் அறை தோழி அட்சயா, மீண்டும் அறைக்கு திரும்பியுள்ளார். அப்போது அறையின் கதவு வெளி பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது.
இந்த நிலையில், கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்ற அட்சயாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அறையில் மெத்தை மீது மல்லாந்த நிலையில், வர்ஷினி பிணமாக கிடந்துள்ளார்.
இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த மாணவி, இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இளம் பெண்ணின் மரணம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வர்ஷினியின் அறையை ஆய்வு செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு வர்ஷினியின் தந்தை அவர் தங்கியிருந்த அறைக்கு வந்துச் சென்றது தெரிய வந்துள்ளது.
இதனால் அவரை போலீசார் தொடர்ப்பு கொள்ள முயற்சி செய்த நிலையில், அவரது போன் சுவிட் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. அவர் திருநெல்வேலியில் உள்ள வீட்டிற்கும் செல்லவில்லை என்பதால் அவர் எங்கு சென்றுள்ளார் என்பது மர்மமாக உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், வர்ஷினி நெல்லையை சேர்ந்த 40 வயது சித்த மருத்துவரான 2 குழந்தைகளின் தந்தையை காதலித்து வந்த நிலையில், அதனை அறிந்த அவரது தந்தை அதனை கண்டித்துள்ளார். இதன் காரணமாக வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்கிடையே புத்தாண்டுக்கு வர்ஷினி ஊருக்கு சென்றபோது அப்போதும் அவரது பெற்றோர் இது குறித்து பேசியுள்ளனர். ஆனால் வர்ஷினி மிகவும் பிடிவாதமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் தான், அவர் தனது அறையில் பிணமாக கிடந்துள்ளார். இந்த விவகாரத்தில் வர்ஷினி இருந்த அறை வெளியே பூட்டப்பட்டு இருந்தது மற்றும் அவரது அறைக்கு வந்துச் சென்ற அவரின் தந்தை தலைமறைவாக உள்ளது அனைத்தும் வர்ஷினியின் தந்தை இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் வர்ஷினி எப்படி கொலை செய்யப்பட்டார், யார் கொலை செய்தது என்பது இதுவரை உறுதி செய்யப்படாமல் குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN