Enter your Email Address to subscribe to our newsletters

தெலங்கானா, 09 ஜனவரி (ஹி.ச.)
தெலங்கான மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்ற சிறுவன் மீது தெரு நாய்கள் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
சங்காரெட்டி மாவட்டம் ஹத்னூர் மண்டலம் தௌல்தாபாத் கிராமத்தில் தெரு நாய்களின்
தாக்குதலில் மூன்று வயது சிறுவன் பலத்த காயமடைந்தான்.
தௌல்தாபாத்தில் உள்ள
10வது வார்டில் அபூபகர் என்ற மூன்று வயது சிறுவன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென சுமார் 15-20 தெரு நாய்கள் கூட்டமாக சிறுவன் மீது தாக்குதல் நடத்தின. கீழே விழுந்த சிறுவன் மீது கூட்டமாக பாய்ந்து கடித்தன.
இதனால் சிறுவன் கூச்சலிட்டான்.
சிறுவனின் கத்தல் கேட்டு அங்கிருந்த பெண்கள் ஓடோடி வந்து நாய்களை கற்களால் அடித்து விரட்டி சிறுவனை காப்பாற்றினர். ஆனால், அப்போதே சிறுவனுக்கு கடுமையான
காயங்கள் ஏற்பட்டதால் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பலத்த காயமடைந்த
சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் தந்தை அஜீஸ் குரேஷி
வேதனையை வெளிப்படுத்துகிறார்.
சமீப காலங்களில் தெரு நாய்களின் தாக்குதல்கள்
தீவிரமடைந்துள்ளதாகவும், குழந்தைகளும் பெண்களும் வெளியே செல்ல பயப்படும் நிலை
ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் கவலை தெரிவிக்கின்றன.
காயமடைந்த சிறுவனுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, சங்காரெட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
Hindusthan Samachar / GOKILA arumugam