Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.)
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் குழுவினை அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது.
இதற்காக சிறப்பு குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சிறு குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார மற்றும் தொழில் வல்லுநர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் தேவைகளையும் அறிந்து தரவுகளை பெற உள்ளது.
அவர்களிடமிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டு மக்களையும், ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையினை தயார் செய்ய உள்ளது.
தேர்தல் அறிக்கை குழு விவரம்: கே.ஜி.அருண்ராஜ், ஜே.சி.டி.பிரபாகர், ஏ. ராஜ்மோகன், டி.எஸ்.கே.மயூரி, ஏ.சம்பத்குமார், எம்.அருள் பிரகாசம், விஜய் ஆர். பரணி பாலாஜி, முகமது பர்வேஸ், டி.கே.பிரபு, கிறிஸ்டி பிரித்வி, தேன்மொழி பிரசன்னா, எம்.சத்ய குமார்.
மேற்கண்ட குழுவினருக்கு கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதோடு, அந்தந்த பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளை சந்திக்கும் பொழுது தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b