Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.)
லேப்டாப் நல்லபடியாக பயன்படுத்துங்கள், நான் அட்வைஸ் பண்றேன் என்று நினைக்க வேண்டாம். இதில் நிச்சயம் படம் பார்ப்பீர்கள் கேம் விளையாடுவீர்கள், அதை தவிர்த்து விட்டு உங்களுடைய படிப்புக்கு பயனுள்ளதாக பயன்படுத்துங்கள் என்று மாணவிகளுக்கு துணை முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 19.58 கோடி மதிப்பீட்டில் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் கல்வி அரங்கம் கட்டும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்சியில் அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் உடன் இருந்தனர்.
முதற்கட்டமாக 20 மாணவிகளுக்கு துணை முதல்வர் மடிகண்ணிகள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;
பெண்களுடைய கைகளில் இருந்து கரண்டியை பிடுங்கி புத்தகத்தை கொடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார்.
ஆனால் நம்முடைய முதல்வர் புத்தகத்தை மட்டும் இல்ல கூட லேப்டாப் சேர்த்து கொடுத்திருக்கிறார்.
கல்வி எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்தவர் நம்மளுடைய முதலமைச்சர் பெரிய பெரிய நிறுவனத்தில் பணிபுரிய இந்த லேப்டாப் உங்களுக்கு பயன் உள்ளதாகவும் இருக்கும்.
லேப்டாப் நல்லபடியாக பயன்படுத்துங்கள், நான் அட்வைஸ் பண்றேன் என்று நினைக்க வேண்டாம்.
இதில் நிச்சயம் படம் பார்ப்பீர்கள் கேம் விளையாடுவீர்கள், அதை தவிர்த்து விட்டு உங்களுடைய படிப்புக்கு பயனுள்ளதாக பயன்படுத்துங்கள் என்று கேட்டுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam