மேற்கு வங்காள கவர்னர் சந்திர போசுக்கு கொலை மிரட்டல் - போலீசார் விசாரணை
கொல்கத்தா, 9 ஜனவரி (ஹி.ச.) மேற்கு வங்காள கவர்னராக செயல்பட்டு வருபவர் சந்திர போஸ். இந்நிலையில், கவர்னர் சந்திர போசுக்கு நேற்று இரவு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகைக்கு இமெயில் மூலம் வந்த மிரட்டலில் சந்திர போஸ் வெடிகுண்டு வைத்து
மேற்கு வங்காள கவர்னர் சந்திர போசுக்கு கொலை மிரட்டல் - போலீசார் விசாரணை


கொல்கத்தா, 9 ஜனவரி (ஹி.ச.)

மேற்கு வங்காள கவர்னராக செயல்பட்டு வருபவர் சந்திர போஸ்.

இந்நிலையில், கவர்னர் சந்திர போசுக்கு நேற்று இரவு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கவர்னர் மாளிகைக்கு இமெயில் மூலம் வந்த மிரட்டலில் சந்திர போஸ் வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக மாநில டிஜிபி-யிடம் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கவர்னருக்கு இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அந்த மிரட்டல் மெயிலில் செல்போன் எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM