விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையத்தில் கூடுதல் பயணிகள் வசதிகள் தொடக்கம்
சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.) விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையத்தில் கூடுதல் பயணிகள் வசதிகள் தொடங்கப்பட்டுள்ளது பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையத்தில் திருவொற்றியூர் சாலையோர
Wimco


சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.)

விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையத்தில் கூடுதல் பயணிகள் வசதிகள் தொடங்கப்பட்டுள்ளது

பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையத்தில் திருவொற்றியூர் சாலையோரம் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டு வசதிகளுடன் உடைய கூடுதல் நுழைவுவாயிலை ஜனவரி 07, 2026 அன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் வசதியினை, அருகிலுள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் திரு. கோபிநாத் மல்யா (இயக்கம் மற்றும் பராமரிப்பு), பொது மேலாளர் திரு. எஸ். சதீஷ் பிரபு (இயக்கம் மற்றும் பராமரிப்பு), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை மக்களுக்குப் பாதுகாப்பான, வசதியான, மற்றும் திறமையான பொதுப் போக்குவரத்தை வழங்குவதில் உறுதியுடன் உள்ளது.

இந்த புதிய வசதி பயணிகளின் சௌகரியத்தை மேலும் அதிகரிப்பதோடு, அதிகமானோர் தங்கள் தினசரி பயணத்திற்கு மெட்ரோ இரயிலைத் தேர்ந்தெடுக்க ஊக்கமளிக்கும்.

Hindusthan Samachar / P YUVARAJ