திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்த பிறந்த குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் - திமுக அரசின் நிர்வாகத் தோல்வி என அதிமுக கண்டனம்
சென்னை, 14 பிப்ரவரி (ஹி.ச) திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து மூன்றே நாட்களான ஒரு பச்சிளம் ஆண் குழந்தை கடத்தப்பட்டிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள
Eps


Gw


சென்னை, 14 பிப்ரவரி (ஹி.ச)

திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து மூன்றே நாட்களான ஒரு பச்சிளம் ஆண் குழந்தை கடத்தப்பட்டிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

பெற்றெடுத்த தாயின் அருகிலிருந்த குழந்தையை, பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பையும் மீறி மர்ம நபர்கள் கடத்திச் சென்றிருப்பது திமுக அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தன் குழந்தையை பறிகொடுத்துவிட்டு அழுது துடிக்கும் அந்த தாயின் கண்ணீருக்கு இந்த மு.க.ஸ்டாலின் மாடல் அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?

இது முழுக்க முழுக்க இந்த விடியா திமுக அரசின் நிர்வாகத் தோல்வி.

அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு எங்கே?தாயின் மடியில் தவழ வேண்டிய குழந்தை எங்கே? என்று அந்த பதிவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ