காதலர் தினத்துக்கு எதிர்ப்பு - இந்து மக்கள் கட்சியினர் 7 பேர் காதலர்களின் புகைப்படத்தை கிழித்து போராட்டம்
சென்னை, 14 பிப்ரவரி (ஹி.ச) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை எதிரே, காதலர் தினத்தை கண்டிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சி சார்பில் நூதன முறையில் போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 7 பேர், கா
Hindu


சென்னை, 14 பிப்ரவரி (ஹி.ச)

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை எதிரே, காதலர் தினத்தை கண்டிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சி சார்பில் நூதன முறையில் போராட்டம் நடை பெற்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 7 பேர், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காதலர்களின் புகைப்படங்களை கிழித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநில பொறுப்பாளர் சுசிலா தேவி,

பெற்றோர்கள் பார்த்து நடத்தும் திருமணமே நல்ல திருமணம். காதலித்து தாங்களே செய்து கொள்ளும் திருமணம் நாய் காதல் போன்றது. பெற்றோர்கள் தினம், குழந்தைகள் தினம், காவலர் தினம், ராணுவ தினம் ஆகியவற்றை கொண்டாடலாம். ஆனால் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டாம் என்று தெரிவித்தார்.

மேலும் வெறும் 7 பேர் ஈடுபடவில்லை, தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது.

போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அங்கிருந்து அகற்றினர்.

Hindusthan Samachar / P YUVARAJ