திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர் குழு பயிற்சி மாநாடு
திருப்பத்தூர், 14 பிப்ரவரி (ஹி.ச.) திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் இன்று திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர் குழு பயிற்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் இன்று
திமுக பூத் கமிட்டி மாநாடு


திருப்பத்தூர், 14 பிப்ரவரி (ஹி.ச.)

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் இன்று திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர் குழு பயிற்சி மாநாடு நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து ரயில் மூலமாக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தார்.

அவருக்கு மாவட்ட ஆட்சியர் சிவ சிவசௌந்திரவல்லி மற்றும் அமைச்சர்கள், எ.வ. வேலு, ஆர்.காந்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ன பலரும் பூங்குத்துக் கொடுத்து வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து திருப்பத்தூரில் உள்ள ஆய்வு மாளிகையில் அவர் தங்கி உள்ளார் இன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் பயிற்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் மாநாட்டில் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam