Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 14 பிப்ரவரி (ஹி.ச.)
கோவையில் உள்ள ஈஷாவில், 32-வது மஹா சிவராத்திரி நாளை (பிப்ரவரி 15ம் தேதி) மாலை 6:00 மணிக்கு துவங்கி மறுநாள் காலை 6:00 மணி வரை கொண்டாடப்பட உள்ளது.
ஈஷாவில் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி விழாவில், சிறப்பு விருந்தினர்களாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். முதன்முறையாக, சத்குரு ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் யோகேஷ்வர் லிங்கத்திற்கு, மஹா அபிஷேகம்' எனும் ஆன்மிக செயல்முறையை அர்ப்பணிக்க உள்ளார்.
(https://isha.sadhguru.org/ta/yogeshwara-linga-maha-abhishekam) தேவையான தகவல்களை பதிவு செய்து, பொது மக்கள் இதில் இலவசமாக பங்கேற்க முடியும். அன்று நள்ளிரவு, சந்தியா மற்றும் பிரம்மமுகூர்த்த நேரங்களில் சக்தி மிகுந்த தியானங்கள் சத்குருவால் வழி நடத்தப்பட உள்ளன.
தமிழகத்தை சேர்ந்த ராப் இசைக்கலைஞர் பிளேஸ், குஜராத் நாட்டுப்புறக் கலைஞர் ஆதித்யா காதவி, மகாராஷ்டிராவை சேர்ந்த தபேலா இசைக் கலைஞர் பிரசாந்த சோனாகரா மற்றும் குழுவினர், ராஜஸ்தான் மாநில நாட்டுப்புறக் கலைஞர் ஸ்வரூப் கான், ராப் இசைக்கலைஞர் பாரடாக்ஸ் மற்றும் சவுண்டஸ் ஆப் ஈஷா குழுவுடன் இணைந்து பாடகர்கள் சுவாகத் ரத்தோடு, பிருத்வி காந்தர்வ ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர்.
இவ்விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகை தரவுள்ளனர், தமிழக மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், இலவச இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முன்பதிவின்றி நேரடியாக வரும் மக்கள் இலவசமாக கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படஉள்ளது. தமிழகத்தில் 60 இடங்களிலும், கேரளாவில் 29 கோவில்களிலும் நேரலை செய்யப்பட உள்ளது.
தவிர, தமிழ், மலையாளம், ஒடிசா, அசாமி, பெங்காலி உட்பட 10 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம், அரபிக், இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட 13 அயல் மொழிகள் என மொத்தம் 23 மொழிகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
Hindusthan Samachar / vidya.b