Enter your Email Address to subscribe to our newsletters

பொள்ளாச்சி, 14 பிப்ரவரி (ஹி.ச.)
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூபாய் 2.17 கோடி மதிப்பில் புதிய சிடி ஸ்கேன் கருவியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
பின்னர் நிகழ்வில் பேசிய அவர்,
தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பானாலும் அதிநவீன மருத்துவ கட்டமைப்பாக இருந்தாலும் தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
கடந்த காலங்களில் தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டு வந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் 70 வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு சிகிச்சை பெற மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அரசின் சுற்றுலாத்துறை குறிப்பிட்டுள்ள செய்தியில் இந்தியாவிற்கு மருத்துவ சுற்றுலாக்காக வருபவர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதம் தமிழகத்திற்கு வருகின்றார்கள்.
வருடம் தோறும் 15 லட்சம் பேர் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு மருத்துவ பயன்பாடுவதற்காக வருகை தருகின்றார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தமிழகம் சிறந்த மருத்துவக் கட்டமைப்பை பெற்றுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அதி நவீன உபகரணங்களையும் பெற்றுள்ளது.
குறிப்பாக ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள கேன்சர் ரோபோடிக் 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை மத்திய அரசு ஜிம்பர், எய்ம்ஸ், போன்ற ஓரிரு மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. கேன்சர் ரோபோடிக் தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
முதல்வர் அவர்களால் 2023 துவக்கி வைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் எண்டோஸ்கோப்பி என்று சொல்லப்படுகிற கருவி வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லை. தமிழ்நாடு அரசின் மருத்துவ துறையின் கட்டமைப்பும் மேம்பட்டு வருகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam