Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 14 பிப்ரவரி (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏவும் அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்த நிலோபர் கபீல் அதிமுகவில் இருந்து விலகுவதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
நான் நீண்ட காலமாக கழகத்தில் பயணித்து வந்தேன். தற்சமயம் எனது சொந்த சூழ்நிலை காரணமாக கழகத்தில் தொடர்ந்து பணிபுரிய இயலவில்லை. எனவே, நான் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். எனது விலகல் கடிதத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இதுவரை தாங்கள் எனக்கு அளித்த மரியாதைக்கு நன்றி மற்றும் கழக நிர்வாகிகளுக்கும். குறிப்பாக திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுக்கும் நன்றி.
என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை திருப்பத்தூரில் நடைபெறும் மாநாட்டில் அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திமுக மாநாட்டு திடலுக்கு திமுக பேட்ஜ் உடன் நிலோஃபர் கபில் இன்று வந்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற நிலோஃபர் கபில், சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
அண்மையில் அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த அன்வர்ராஜா திமுகவில் இணைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b