திருப்பத்தூர் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
திருப்பத்தூர், 14 பிப்ரவரி (ஹி.ச.) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திருப்பத்தூரில் நடைபெறும் வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் பங்கேற்க சென்னையிலிருந்து ரயிலில் செல்ல திட்டமிட்டார். இதற்காக காரில் சென்னை சென்டிரல்
visit to Tirupattur


திருப்பத்தூர், 14 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திருப்பத்தூரில் நடைபெறும் வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் பங்கேற்க சென்னையிலிருந்து ரயிலில் செல்ல திட்டமிட்டார்.

இதற்காக காரில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு வரும் வழியில் மக்கள் பெரும் திரளாக வந்து மகளிர் உரிமைத்தொகையை முன்கூட்டியே வழங்கியதற்கு நன்றி தெரிவித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், சென்னையில் இருந்து இன்று காலை ரயில் மூலம் திருப்பத்தூர் புறப்பட்டார். தமிழக முதல்வர் ஸ்டாலின். அவருக்கு அரக்கோணம் ரயில் நிலையத்திலும் ஏராளமான திமுக தொண்டர்கள் காத்திருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் சென்றடைந்த முதல்வர் ஸ்டாலின், ஜோலார்பேட்டையில் சாலையில் தன்னை வரவேற்கக் காத்திருந்த மக்களை நேரில் சந்தித்துப் பேசினார். வழிநெடுக, மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5000 வரவு வைக்கப்பட்டதற்கு, ஏராளமான பெண்கள் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்ந்து ஜோலார்பேட்டை சென்ற முதல்வருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டார். அப்போது பெண்கள் அவரை சூழ்ந்துகொண்டு 5000 உரிமைத் தொகை கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து இனிப்புகளை ஊட்டினர்.

பின்னர் ஒரு பயனாளியின் வீட்டுக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், திட்டங்கள் எல்லாம் வந்து சேர்ந்துள்ளதா?. மாதம் மாதம் பணம் வருகிறதா?செல்போனில் மெசேஜ் வந்திருக்குமே? பிள்ளைங்க எந்த காலேஜில் படிக்கிறாங்க என்று விசாரித்ததோடு அவர்களிடம் ''நல்லா படிங்க'' என்று அறிவுறுத்தினார்.

Hindusthan Samachar / vidya.b