திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தையை தேடி தவிக்கும் தாயின் பாசப் போராட்டம் உங்கள் கல்நெஞ்சைக் கரைய வைக்கவில்லையா? - முதல்வருக்கு வானதி சீனிவாசன் கேள்வி
சென்னை, 14 பிப்ரவரி (ஹி.ச.) திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் பச்சிளங்குழந்தை கடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட
Vanathi srinivasan


Eh


சென்னை, 14 பிப்ரவரி (ஹி.ச.)

திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் பச்சிளங்குழந்தை கடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

சரியாக கண் விழிக்காத பச்சிளங் குழந்தையைக் கூட பாதுகாக்க வக்கற்ற நிலையில் விடியா திமுக அரசு செயல்படுவது வெட்கக் கேடு. இதற்கும் ஏதாவது ஒரு உருப்படியில்லாத பதிலை தயாராக வைத்திருக்கிறீர்களா அல்லது தெரியாது என்று மழுப்பப் போகிறீர்களா சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களே!

பாதுகாப்பில்லாத தமிழகம், மக்களுக்குப் பாதுகாப்பில்லாத ஆட்சி என இன்னும் பலவற்றில் பாதுகாப்பு என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் தமிழகம் இன்று மாறியிருப்பது மக்கள் விரோத திமுக ஆட்சியின் அவலம்.

பச்சிளங்குழந்தையைக் கூட கடத்தும் அளவிற்கு துணிச்சல் உள்ளது என்றால் தமிழகத்தை சட்டம், ஒழுங்கு நிர்வாக சீர்கேடுகளால் மாற்றி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் போட்டோஷுட்டும், விளம்பரங்களிலும் நடிக்கவும் எப்படி மனம் வருகிறது முதல்வர் அவர்களே.

கடத்தப்பட்ட குழந்தையை தேடி தவிக்கும் தாயின் பாசப் போராட்டம் உங்கள் கல்நெஞ்சைக் கரைய வைக்கவில்லையா?

கடத்தப்பட்ட குழந்தையை விரைவில் மீட்டு தாயிடம் ஒப்படைக்க காவல்துறையை வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ