மனிதநேயம் தழைக்க வங்கதேசம் ஒன்றுபட கைகோர்க்க வேண்டும் - தாரிக் ரகுமான்
வங்கதேசம், 15 பிப்ரவரி (ஹி.ச.) வங்கதேசத் தேர்தல் களத்தில் வங்கதேச தேசியவாதக் கட்சி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றதையடுத்து, கலீதா ஜியாவின் புதல்வர் தாரிக் ரகுமான் வெகுவிரைவில் பிரதமர் நாற்காலியில் அமரவுள்ளார். இந்நிலையில் தாரிக் ரகுமான் செய்தியாள
மனிதநேயம் தழைக்க வங்கதேசம் ஒன்றுபட கைகோர்க்க வேண்டும் - தாரிக் ரகுமான்


வங்கதேசம், 15 பிப்ரவரி (ஹி.ச.)

வங்கதேசத் தேர்தல் களத்தில் வங்கதேச தேசியவாதக் கட்சி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றதையடுத்து, கலீதா ஜியாவின் புதல்வர் தாரிக் ரகுமான் வெகுவிரைவில் பிரதமர் நாற்காலியில் அமரவுள்ளார்.

இந்நிலையில் தாரிக் ரகுமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது:

பாதுகாப்பும், மனிதநேயமும் நிறைந்த வங்கதேசத்தை உருவாக்க ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது.

இம்முறை தேசத்தை மறுசீரமைக்கும் பணியில் அனைவரும் பொறுப்புடன் பங்கேற்க வேண்டும்.

சட்டத்தின் ஆட்சி வங்கதேசத்தில் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இதற்காக எந்த விலை கொடுக்கவும் தயார். யாரொருவருக்கும், எந்த சூழ்நிலையிலும் அநீதி நேரிடக்கூடாது.

வங்கதேசத்தின் விடுதலையை விரும்பும் மக்கள், வங்கதேச தேசியவாதக் கட்சிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளனர்.

இந்த வெற்றி வங்கதேச மக்களுடையது. அனைவரின் விருப்பப்படியும் தேசம் கட்டியெழுப்பப்படும்.என்றார்.

Hindusthan Samachar / JANAKI RAM