சென்னை மத்திய கைலாஷில் 60 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள எல் வடிவ பாலம் - முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்
சென்னை, 15 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பு என்பது சர்தார் படேல் சாலையையும், ராஜீவ் காந்தி சாலையையும் ( OMR ) இணைக்கின்ற முக்கிய சந்திப்பு ஆகும். மத்திய கைலாஷ் சந்திப்பு அருகில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி, அடையாறு புற்றுநோய்
Cm


Bs


சென்னை, 15 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பு என்பது சர்தார் படேல் சாலையையும், ராஜீவ் காந்தி சாலையையும் ( OMR ) இணைக்கின்ற முக்கிய சந்திப்பு ஆகும்.

மத்திய கைலாஷ் சந்திப்பு அருகில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, மத்திய அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தரமணியில் உள்ள மத்திய அரசு கல்வி நிலையங்கள், மற்றும் ராஜீவ் காந்தி சாலையில் ( OMR) உள்ள நூற்றுக்கணக்கான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளதால்,

மத்திய கைலாஷ் சந்திப்பு பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும். பீக் ஹவர்சில் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாக காணப்படும்.

இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய கைலாஷ் பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என இந்த சாலையை பயன்படுத்தும் மக்கள் மற்றும் அடையாறு கோட்டூர்புரம் தரமணி கிண்டி பகுதியை சேர்ந்த குடியிருப்பு நல சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன்படி இந்த பகுதியில் எல் வடிவத்தில் சர்தார் படேல் சாலையையும் ராஜீவ் காந்தி சாலையையும் இணைக்கின்ற வகையில் நெடுஞ்சாலை துறையால், 60 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

650 மீட்டர் நீலம், 7.5 மீட்டர் அகலத்தில் இருவழி சாலையுடன் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம், தென்சென்னை மக்களின் குறிப்பாக அடையாறு, தரமணி, கோட்டூர்புரம், கிண்டி பகுதி மார்க்கமாக செல்லும் வாகனங்கள், மற்றும் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறை வேறியுள்ளது.

Peak hours இல் மத்திய கைலாஷ் சந்திப்பு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து. நெரிசல் மெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

கிண்டியில் இருந்து ராஜீவ் காந்தி சாலை செல்லும் வாகனங்கள், மத்திய கைலாஷ் சந்திப்பு சிக்னலில் நிற்பது தவிர்க்கப்படும். வாகனங்கள் எளிதில் செல்லலாம்.

கோட்டூர்புரம், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி போன்ற பகுதியில் இருந்து ஐஐடி, புற்றுநோய் மருத்துவமனை செல்ல வேண்டிய வாகனங்கள் மத்திய கைலாஷ் மேம்பாலத்தின் கீழ் you turn செய்து செல்லாம்.

இதே போல் ராஜீவ் காந்தி சாலையில் இருந்து மத்திய கைலாஷ் நோக்கி வரும் வாகனங்களும் மேம்பாலத்தின் கீழ் you turn செய்துகொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. அதற்காக தனியாக அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மேம்பாலத்திற்கு கீழ்,

கீழ் தமிழர்களின் கலை மற்றும் கலாச்சாரங்களான

கொம்புக் கலை,உறுமி தாள இசைக்கலை,தெருக்கூத்து,

பொய்க்கால் குதிரை ஆட்டம்,பரத நாட்டியம்,நாதஸ்வரக் கலை,ஜல்லிக்கட்டு,தபேலா கலை,மண்பாடக் கலை,களரி,கரகாட்டம்,

காவடியாட்டம்,சிலம்பாட்டம்,

கோலாட்டம்,யாழ்,பறை ஆட்டம்,வீணை,புலியாட்டம்,

கும்மியாட்டம்,ஒயிலாட்டம் பிரதிபலிக்கும் வகையில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ