2 மாதங்களில் மட்டும் 9,000 ரூபாயை மக்களிடம் முதல்வர் கொண்டு போய் சேர்த்துள்ளார் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூர், 15 பிப்ரவரி (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் திருவுருவச்சிலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து இந் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசிய
Udhay


தஞ்சாவூர், 15 பிப்ரவரி (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் திருவுருவச்சிலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இந் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது,

தேர்தலை காரணம் காட்டி எப்படியாவது மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி விடலாம்னு பாஜகவும் அதன் அடிமை கூட்டங்களும் முயற்சி செய்தார்கள்.

அவர்கள் சூழ்ச்சியை முறியடித்து ஒரே நேரத்தில் 5,000 ரூபாயை மகளிரிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

போன மாதம் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000, பொங்கல் தொகையாக ரூ.3,000, இப்போது ரூ.5,000 என இரண்டு மாதங்களில் மட்டும் ரூ.9,000-ஐ தமிழக விமுதல்வர் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.

ஜாடிக்கு ஏத்த மூடிப்போல மோடிக்கு ஏற்ற மூடியாக இ.பி.எஸ்.மாறியுள்ளார்.

2026 -ம் திராவிட மாடல் ஆட்சி தான் அமையும் என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ