Enter your Email Address to subscribe to our newsletters



சென்னை, 15 பிப்ரவரி (ஹி.ச.)
ஈரோடு சேலம் திருமண்டலத்தின் சி.எஸ்.ஐ.
பேராயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் மரணமுற்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றுண்ணா துயரமும் கொண்டேன் என்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
மிக சிறந்த ஆன்மிகத் தலைவராகவும், சமூக செயல்பாட்டாளாராகவும், சமூக நல்லிணக்கத்திருக்கு பாடுபட்டவரும், சிறந்த சீர்திருத்த பேச்சாளருமாகிய அவரின் மறைவு கிறிஸ்தவ மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து சமுதாயத்தினருக்கும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் ஈரோடு -சேலம் திருமண்டலத்தின் அனைத்து திருச்சபை மக்களுக்கும் குடும்பத்தினர்க்கும் அதிமுக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ