Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 15 பிப்ரவரி (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மாத்தூரில் பிரசித்தி பெற்ற ஆலயமாக ஸ்ரீ பீளிக்கான் முனீஸ்வரர் ஆலயம் திகழ்கிறது
இந்த ஆலயத்தில் ஸ்ரீ பீளிக்கான் முனீஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் சொக்கலிங்கபுரம் மாத்தூர் ஊர் பொதுமக்கள் சார்பில் ரூபாய் 50 -லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட இந்த அரங்கத்தை விராலிமலை அதிமுக MLA வும் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்
அப்போது ஸ்ரீ பீலிக்கான் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாட்டில் சொக்கநாதபுரம் மாத்தூர் கிராம பெண்கள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர்
Hindusthan Samachar / Durai.J