Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 பிப்ரவரி (ஹி.ச)
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது,
இங்க எத்தனை பேருக்கு தமிழ் தெரியும். போனவாட்டி இங்கு வந்தபோது ஆங்கிலத்தில் உரையாற்றினேன் ஏனென்றால் நானும் படித்துள்ளேன் என்பதை காட்டுவதற்காக. ஆனால் உணர்வோடு உரையாட வேண்டும் என்றால் எனக்கு என் தாய் கொடுத்த மொழியில் தான் பேச வேண்டும். இந்த நம்பிக்கை ஆங்கிலம் கற்ற நாளில் வந்து விட்டது. கிட்டத்தட்ட 55 வயதில் தான் ஆங்கிலம் கற்றுக்கொண்டேன்.
இன்னும் தமிழ் படித்துக்கொண்டு வருகிறேன். எத்தனை முறை இங்கு வந்து சென்றாலும் நான் மாணவனாகவே உள்ளேன். அதனால் தான் இங்கு வந்துள்ளேன்.
எங்கள் கொள்கை வளர வேண்டுமென்றால் கூட்டம் குறைவாக இருந்தாலும் படித்தவர்கள் இடத்தில் பேச வேண்டும். அதனால் தான் இங்கு வந்துள்ளேன். அண்ணா கலைஞர் காந்தி செய்ததை நானும் செய்கிறேன். உங்கள் கேள்விக்கு பதில் சொல்லி எனக்கு தெளிவு பெறுவதே எனது சுயநலம். இங்கு வந்ததுக்கு காரணம். இன்னும் நீங்கள் செய்தித்தாள்கள் படிக்கிறீர்கள், ட்விட்டர் பார்க்கிறீர்கள். வெயிலை நிழலில் நின்று ரசிக்க வேண்டும். உங்களுடைய தனிநிழல் தனிச்சிந்தனை தான். உங்கள் கல்வி அலுவலகம் வரை கொண்டு சேர்க்கும். பாதுகாப்பாக தெருவில் நடப்பதற்கு உங்களுக்கு எது உதவி செய்யும் என்பதை நினைத்து பாருங்கள். கல்வி மற்றும் கணக்கு அங்கு உதவாது. நீங்கள் சமுதாயத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். சிலபஸ்ஸே இல்லாத நபர்கள் நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு சொல்கிறார்கள். பெண்களுக்கு ஓட்டு உரிமை வாங்க இங்கு பல ஆண்டுகள் ஆகி விட்டது. என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்,
நடிகர் விஜய் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்ததற்கு கடும் கண்டனம் வலுத்து வரக்கூடிய நிலையில் அதற்கு பதிலளித்த நடிகர் கமலஹாசன் அது அவர்கள் அரசியல் என் அரசியல் இல்லை என பதிலளித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ