Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 15 பிப்ரவரி (ஹி.ச.)
இந்திய தபால் துறை சார்பில் சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய நினைவு தபால், சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்படவுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் மஹா சிவாலய ஓட்டம் குறித்த சிறப்புகளை உலகம் முழுவதும் அறிய செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
சிவாலய ஓட்டம் என்பது மகா சிவராத்திரியன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 பழமையான சிவாலயங்களுக்கு பக்தர்கள் “கோவிந்தா கோபாலா” என்று முழங்கியபடி ஓடிச் சென்று வழிபடும் ஒரு தனித்துவமான சடங்கு மாரத்தான் ஆகும்.
இது சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்துவதுடன், மன உறுதி, உடல் வலிமை மற்றும் பக்திப் பெருக்கை உணர்த்தும் ஆன்மிக நிகழ்வாகும்.
இந்த நிகழ்ச்சியை இந்திய அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Hindusthan Samachar / ANANDHAN