Enter your Email Address to subscribe to our newsletters

நாகப்பட்டினம், 15 பிப்ரவரி (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் நில வாழ் வெளிநாடு, உள்நாட்டுப் பறவைகள் கணக்கெடுப்பு நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், சரணாலயப் பகுதியில் காணப்படும் வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு கடந்த சனிக்கிழமையின் பொது எப்படி கணக்கெடுக்க வேண்டும் என்பது குறித்தான பயிற்சி அளிக்கப்பட்டது.
கணக்கெடுக்கும் பணியில் குழுக்களாகப் பிரிந்துச் சென்று வனத்துறை அதிகாரிகளும் பயிற்சி அளிக்கப்பட்டவர்களும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ