தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்தப் புயல் உருவாகக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, 15 பிப்ரவரி (ஹி.ச.) தென்கிழக்கு வங்கக் கடலில் எதிர்வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 16) குறைந்த காற்றழுத்தப் புயல் உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பூம
தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்தப் புயல் உருவாகக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை, 15 பிப்ரவரி (ஹி.ச.)

தென்கிழக்கு வங்கக் கடலில் எதிர்வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 16) குறைந்த காற்றழுத்தப் புயல் உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்குப்புறம் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது.

இதன் விளைவாக, தெற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் திங்களன்று (பிப்ரவரி 16) குறைந்த காற்றழுத்தப் பகுதி தோன்ற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (பிப்ரவரி 15) முதல் பிப்ரவரி 18 வரை வறண்ட வானிலையே நிலவும். அதன் பின், பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் லேசான தூறல் பெய்யக்கூடும்.

பனிமூட்டம்:

இதனிடையே, இன்று (பிப்ரவரி 15) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், பிப்ரவரி 16-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் லேசான பனிமூட்டம் நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM