Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 15 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழக-கேரள எல்லை பகுதியான கேரள மாநிலம், தென்மலை பகுதியில் நாட்டின் 2-வது மிகப்பெரிய அணையான தென்மலை அணையானது உள்ளது.
அதாவது, கேரளாவில் உள்ள முக்கிய சுற்றுலாத்தளமாக விளங்கிவரும் நிலையில், இந்த அணையில் மனித உடல் ஒன்று மிதப்பதை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்து சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில், விரைந்து வந்த தென்மலை போலீசார் அணையில் மிகுந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தென்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் நெல்லை மாவட்டம், சாந்தி நகர் பகுதியை சேர்ந்த உலகமணி (வயது 27) என்ற இளைஞர் என்பதும், அவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தென்மலை அணைக்கு சுற்றுலா வந்த நிலையில், அவரை காணவில்லை என அவரது உறவினர்கள் தேடி வந்தது தெரியவந்தது.
மேலும், உயிரிழந்த உலகமணி என்ற வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN