பிரதமர் மோடி மகா சிவராத்திரி விழா வாழ்த்து
புதுடெல்லி, 15 பிப்ரவரி (ஹி.ச.) இந்தியா முழுவதும் உள்ள இந்து மக்களால் மகா சிவராத்திரி விழா இன்று (பிப்ரவரி 15) கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகமெங்கிலும் சிவன் கோயில்களில் இன்று (பிப்ரவரி 15) நான்கு கால சிறப்பு பூஜைகள்
பிரதமர் மோடி மகா சிவராத்திரி விழா வாழ்த்து


புதுடெல்லி, 15 பிப்ரவரி (ஹி.ச.)

இந்தியா முழுவதும் உள்ள இந்து மக்களால் மகா சிவராத்திரி விழா இன்று (பிப்ரவரி 15) கொண்டாடப்படுகிறது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகமெங்கிலும் சிவன் கோயில்களில் இன்று (பிப்ரவரி 15) நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.

நாளை (பிப்ரவரி 16) அதிகாலை சிவராத்திரி விழா நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழகமெங்கிலும் சிவன் கோயில்களில் ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பக்தர்கள் அனைவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியை தமது எக்ஸ் தளப் பக்கம் வழியாகப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து,அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

நாடெங்கிலுமுள்ள எமது அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் மகா சிவராத்திரி நாள் வாழ்த்துகள்.

ஒவ்வொருவர் மீதும் மகாதேவர் தமது கருணைப் பார்வையைச் செலுத்தட்டும் என்பதே எமது பிரார்த்தனையாக அமைந்திருக்கிறது.

சிவபெருமானின் ஆசியால் நமது பாரதம் செழிப்பின் உச்சத்தில் அரியணையிட்டு நிலைத்திருக்கட்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b