அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை  ஆசிரியர் கைது
நாமக்கல், 15 பிப்ரவரி (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த கொத்தமங்கலம் அருகே நஞ்சப்பகவுண்டம் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் கபிலக்குறிச்சியை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 58), என
போக்சோ


நாமக்கல், 15 பிப்ரவரி (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த கொத்தமங்கலம் அருகே

நஞ்சப்பகவுண்டம் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.

இப்பள்ளியில் கபிலக்குறிச்சியை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 58),

என்பவர் தலைமை ஆசிரியராக புணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பள்ளி நாள் என்பதால்

அப்பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை

கொடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து மாணவியின் பெற்றோர்கள் கொடுத்த

புகாரின் பெயரில் குழந்தைகள் பாதுகாப்பு எண் திட்ட ஒருங்கிணைப்பாளர் மேகநாதன்,

ஜேடர்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜ் ஆதரவாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்களிடம்

புகார் மனு கொடுக்க வேண்டாம் என பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

பள்ளிக்கு படிக்க வந்த மாணவியிடம் தலைமை ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த

சம்பவம் சக மாணவர்களின் பெற்றோரிடமும், கிராமத்திலும் பெரும் அதிர்ச்சியை

ஏற்படுத்தியது.

இந்நிலையில் தலைமை ஆசிரியரை போலீசார் போக்சோவில் இன்று கைது கைது செய்யப்பட்டார்

Hindusthan Samachar / GOKILA arumugam