Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 15 பிப்ரவரி (ஹி.ச.)
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் காவல் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் நின்று
கொண்டிருந்த பிரமோத் என்ற உதவி ஆய்வாளரை ஷாபி என்பவர் திடீரென கத்தியால் குத்தினார்.
உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், பிரமோதை அருகில் உள்ள
மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஷாபி போலீசாரால் கைது செய்யப்பட்டார் சம்பவம்
தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கைது செய்யப்பட்ட ஷாபியிடம் போலீசார் விசாரித்த போது மற்றொரு உதவி ஆய்வாளரான
ஸிஜித், நிராஸ் ஆகியோர் ஷாபி மீது ஒரு குற்ற வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்ததோடு, அவரை கைது செய்திருந்தனர்.
அந்த முன்விரோதத்தில் இருவரையும்
பழிவாங்குவதற்காக கத்தியோடு அங்கு வந்ததும் ஆனால் ஹோட்டல் அருகே நின்ற பிரமோத்தை கத்தியால் குத்தியதும் தெரிய வந்தது.
ஷாபி ஏற்கனவே மாவட்ட ஆட்சியரின் காரை
சேதப்படுத்தியது, வாக்கு சாவடியில் அத்துமீறி பிரச்சனையில் ஈடுபட்டது,
மாவோயிஸ்டுகளின் பெயரில் சுவரொட்டி ஒட்டியது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள்
தொடர்பான வழக்குகளில் பிரதி ஆவார்.
அது மட்டுமின்றி இவர் மீது மேலும் பல குற்ற
வழக்குகளும் உள்ளன.
பட்ட பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உதவி
ஆய்வாளரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / GOKILA arumugam