திருப்பூர்,கரூர் மாவட்ட பொது குடிநீருக்கு பேராபத்து -பாசன விவசாயிகள் குற்றச்சாட்டு!
திருப்பூர், 15 பிப்ரவரி (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த பெரமியம் பகுதியில், அமராவதி ஆற்றில் இருந்து அனுமதியின்றி தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்டு வருவதாக பாசன விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கடும் க
h


திருப்பூர், 15 பிப்ரவரி (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த பெரமியம் பகுதியில், அமராவதி ஆற்றில் இருந்து அனுமதியின்றி தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்டு வருவதாக பாசன விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கடும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

இப்பகுதியில் உள்ள சில தனியார் கோழிப்பண்ணை முதலாளிகள், பெரும் விவசாய நில உரிமையாளர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு கொண்ட பிரமுகர்கள், இலவச மின்சாரத்தை தவறாக பயன்படுத்தி, அமராவதி ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீரை எடுத்து, தங்களது தோட்டங்கள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக, தேசிய நெடுஞ்சாலை, கிராம சாலைகள், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆற்றுப்பகுதிகள் உடைக்கப்பட்டு, ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. அந்த பள்ளங்களில் தண்ணீரை தேக்கி, 8 எச்பி, 12 எச்பி திறன் கொண்ட மோட்டார்களின் மூலம், 5 முதல் 7 கிலோமீட்டர் தூரம் வரை பைப் லைன் அமைத்து தண்ணீர் திருடப்படுகிறது. என்று

பாசன விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இந்த சட்டவிரோத செயலால், அருகாமையில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, கோடை காலங்களில் அமராவதி ஆறு வறண்டு காணப்படும் நிலையில், ராட்சத குழிகள் தோண்டி ஆற்றின் அடித்தட்டிலிருந்து கூட தண்ணீர் எடுக்கப்படுகிறது.

இதில் அதிர்ச்சியளிக்கும் தகவல் என்னவென்றால், இவ்வாறு திருடப்படும் அமராவதி ஆற்றுத் தண்ணீர், விவசாய பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், குடிநீராக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமராவதி ஆறு, திருப்பூர் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரம்.

இந்த ஆற்றை நம்பியே திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தாராபுரம் தாளக்கரை வீராச்சிமங்கலம் காளிபாளையம் கொளத்துப்பாளையம் உள்ளிட்ட நூத்தி ஐம்பத்தி ஆறு கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் மேலும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இந்த அமராவதி ஆற்று நீர் பயன்படுத்து வருகிறது மேலும் கரூர் மாவட்டத்தில் மாநகரம், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன.

ஆற்றின் மேற்பகுதிகளில் இவ்வாறு கண்மூடித்தனமாக தண்ணீர் திருடப்பட்டால், கடைமடை விவசாயிகளுக்கும், கரூர் மக்களுக்கும் குடிநீர் செல்வதே கேள்விக்குறியாகி விடும்.

இன்று திருப்பூர் மாவட்டம் பெரமியம் பகுதியில் தண்ணீர் திருட்டு, நாளை கரூர் மாவட்டம் குடிநீர் தட்டுப்பாடு என்பதே நிலைமை.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும்,

இதில் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார், கோட்டாட்சியர் வரை பலரும் மௌனமாக இருப்பதற்குக் காரணம் – பெருந்தொகை கைமாற்றமே என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த 15 நாட்களுக்கு நாட்களாக தினந்தோறும் இரவு நேரத்தில் பெரமியம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய நெடுஞ்சாலையை உடைத்து, தனியார் நிறுவனங்கள் மற்றும் பெரும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளின் பின்னணியில், இரவு நேரங்களில் அதிகாரிகளின் துணையுடன் பைப் லைன் பதிக்கப்படுவதாக பாசன விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இதற்கு மாறாக, ஒரு அரசியல் பின்னணியுள்ள நபர், குமார்

“நாங்க திமுக ஆளுங்க. எல்லா பக்கமும் பைப் லைன் போட்டிருக்கோம். இது பெரிய விஷயமா? செய்தி போடுங்க, பார்த்துக்கலாம்” என செய்தியாளரை மிரட்டியுள்ளனர்

இதனிடையே, கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட பொது பயன்பாட்டு பைப் லைன் தீர்மானத்தை, தனிப்பட்ட நீர் திருட்டுக்காக பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில்,

அனுமதியின்றி அமைக்கப்பட்ட அனைத்து பைப் லைன்களையும் உடைத்தெறிய வேண்டும்.

சட்டவிரோத மோட்டார் இணைப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

இலவச மின்சார இணைப்புகளை துண்டிக்க வேண்டும்.

தினந்தோறும் திருடப்பட்ட நீருக்கான கோடிக்கணக்கான இழப்பீட்டை வசூலிக்க வேண்டும்.

என மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முடிவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்களா?

அமராவதி ஆற்றை காக்க வேண்டிய அரசு,

அமராவதி ஆற்றின் ஆற்றை கொள்ளையடிப்பவர்களை காப்பாற்றுகிறதா?

அமராவதி ஆறு அரசியல்வாதிகளின் சொத்தா?

கரூர் மக்களின் குடிநீர் யாருடைய லாபத்துக்காக?

என்ற கேள்விகள் இன்று மக்கள் மத்தியில் எதிரொலிக்கின்றன.

Hindusthan Samachar / Durai.J