ராமநாதபுரம் பிரதான வீதியில் குவியல் குவியலாக கொட்டி கிடக்கும் கழிவுகள் -  கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
ராமநாதபுரம், 15 பிப்ரவரி (ஹி.ச.) ராமநாதபுரம் நகரின் பிரதான பகுதியான அரண்மனை பஜார் பகுதியில் பிரபல ஹோட்டல் முன்பாக குவியல் குவியலாக மனித கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து இவை வெளியேறி இருக்கலாம் என அந்த பகுதி மக்கள் த
Ramanathapuram Municipality


ராமநாதபுரம், 15 பிப்ரவரி (ஹி.ச.)

ராமநாதபுரம் நகரின் பிரதான பகுதியான அரண்மனை பஜார் பகுதியில் பிரபல ஹோட்டல் முன்பாக குவியல் குவியலாக மனித கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.

பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து இவை வெளியேறி இருக்கலாம் என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அருவருப்பையும் கடுமையான சுகாதார கேட்டையும் ஏற்படுத்தும் விதத்தில் குவிந்து கிடக்கும் மனிதக் கழிவுகளால் அந்த பகுதியில் செல்பவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லக்கூடிய ஒரு சூழல் நிலவி வருகிறது.

ஆனால் நகராட்சி நிர்வாகம் அதனை அகற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்று சிவராத்திரியை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்குவதற்கு அரண்மனை பகுதியில் குவிந்த பொதுமக்கள், இந்த சுகாதாரக் கேட்டை மிதித்துக் கொண்டே செல்லக்கூடிய ஒரு சூழல் நிலவி வருகிறது.

ஆனால் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Hindusthan Samachar / ANANDHAN