சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
ராமநாதபுரம், 15 பிப்ரவரி (ஹி.ச.) ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் சிவராத்திரி தினம் என்பதால் பல்வேறு மாவட்டம
Rameswaram Temple


ராமநாதபுரம், 15 பிப்ரவரி (ஹி.ச.)

ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் சிவராத்திரி தினம் என்பதால் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிவிட்டு கடற்கரை மண்ணில் சிவலிங்கம் போன்று வடிவமைத்து வழிபட்டு வருகின்றனர்

பின்னர் கோயிலுக்கு உள்ளே உள்ள சாமி மற்றும் அம்பாளை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் பெற்று செல்கின்றனர்.

வட மாநில பக்தர்கள் காசியில் இருந்து கொண்டு வந்த கங்கை நீரை அபிஷேகத்திற்கு வழங்குவதற்காக தலையில் சுமந்து கொண்டு வந்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN