Enter your Email Address to subscribe to our newsletters



சென்னை, 15 பிப்ரவரி (ஹி.ச)
பாட்ஷா திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் மூத்த மகன் தமிழ் அழகன் நேற்று உடல்நலக் குறைவு காரணமாக மறைந்தார்.
அவரது இறுதி சடங்கு இன்று மாலை சென்னையில் உள்ள இல்லத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் படப்பிடிப்பில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
மதிப்பிற்குரிய அமரர் ஆர்.எம். வீரப்பன் அவர்களின் புதல்வர், எனது அன்புத் தம்பி தமிழழகன் அருமையான மனிதர்.
அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவ்வாறு அவர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ