மகா சிவராத்திரியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
விருதுநகர், 15 பிப்ரவரி (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்ப மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு விடிய வி
சதுரகிரி


விருதுநகர், 15 பிப்ரவரி (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்ப மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் இன்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய நான்கு கால பூஜைகள் பூஜையில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற உள்ளது.

மஹா சிவராத்திரி பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

கோவில் வளாகப் பகுதி மற்றும் தாணிப்பாறை அடிவார பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட வனத்துறையினர்,

தீயணைப்புத்துறையினர், மற்றும் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam