Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 15 பிப்ரவரி (ஹி.ச.)
தஞ்சை கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் பிறையணி அம்மன் சமேத நாகநாத சுவாமி
திருக்கோவில் நவக்கிரக ஸ்தலங்களில் ராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும்
இத்தலத்தில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா, விசேஷ ஹோமம், 1,008
சங்காபிஷேகம் தொடர்ந்து இரவு முழுவதும் நான்கு கால அபிஷேகம் ஆராதனைகள் என
விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று மஹாசிவராத்திரியை முன்னிட்டு இரு புனிதநீர் நிரப்பிய கடங்கள்
மற்றும் புனித நீர் நிரப்பிய 1,008 வலம்புரி சங்குகளை நெல்மணிகள் மீது வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து, மலர்கள் சூட்டி, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க விசேஷ ஹோமம் வளர்த்து, பூர்ணாஹூதி நடைபெற்றது.
பின்னர் நாகநாதசுவாமிக்கு பல்வேறு விதமான வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகமும், தொடர்ந்து 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் கலசத்தில் உள்ள
நீரை கொண்டு, சுவாமிக்கும், அம்பாளுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு பட்டு மற்றும் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த
நாகநாதசுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam