Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 15 பிப்ரவரி (ஹி.ச)
மகா சிவராத்திரியையொட்டி பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை, வேலூர் , காட்பாடிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 15, 16) இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் அறிவித்துள்ளது.
ரெயில்வே அறிவிப்பின்படி, விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 15,16 தேதிகளில்) காலை 10.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டிஎண் 06130), அதே நாளில் முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும்.
எதிர்வழித்தடத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து அதே நாள்களில் பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை -விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129), பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும். இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
வேலூருக்கு சிறப்பு ரயில்: விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 10.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் --வேலூர் கண்டோன்மென்ட் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06167), மறுநாள் அதிகாலை 1.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் சென்றடையும்.
எதிர்வழித்தடத்தில் வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (பிப்ரவரி 15,16) அதிகாலை 2.05 மணிக்குப் புறப்படும் வேலூர் கண்டோன்மென்ட் - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06168), அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.
இந்த ரயில்கள்வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை, திருவண்ணாமலை, போளூர், ஆரணி சாலை, சேதராம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
காட்பாடி சிறப்பு ரயில்: விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (பிப்ரவரி 15,16) காலை 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் (வண்டி எண் 06049), அதேநாள்களில் பிற்பகல் 1.05 மணிக்கு காட்பாடி ரயில் நிலையம் சென்றடையும்.
எதிர்வழித்தடத்தில் அதே நாள்களில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.20 மணிக்குப் புறப்படும் காட்பாடி -விழுப்புரம் முன்பதிவில்லா பயணிகள் ரயில் (வண்டி எண் 06050), விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு மாலை 5.10 மணிக்கு வந்தடையும்.
இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை, திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், அகரம்சிப்பந்தி, போளூர், மதிமங்கலம், ஆரணிசாலை, சேதராம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம், கனியம்பாடி, பெண்ணாத்தூர் ஹால்ட், வேலூர் கண்டோன்மென்ட், வேலூர் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b