900 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜேந்திர சோழ மன்னனால் கட்டப்பட்ட நாரீஸ்வரர் கோயில் சிலைகள் மீட்பு!
சென்னை, 15 பிப்ரவரி (ஹி.ச.) தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள், தொன்மையான பொருட்கள் மற்றும் கலை பொக்கிஷங்களை மீட்கவும், அந்த குற்றங்களில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை கண்டுப்பிடிக்கவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தொ
Ye


சென்னை, 15 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள், தொன்மையான பொருட்கள் மற்றும் கலை பொக்கிஷங்களை மீட்கவும், அந்த குற்றங்களில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை கண்டுப்பிடிக்கவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தொடர் முயற்சி எடுத்துவருகின்றனர்.

இந்த சிலைகளை மீட்க, (எம்.எல்.ஏ.டி) எம்லாட் எனும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தமிழ்நாட்டிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டு, சம்மந்தப்பட்ட கோவில்களில் ஒப்படைக்கப்படுகிறது.

சிலை கடத்தல் வழக்குகளின் விசாரணையின் போது.

காணாமல்போகும் சிலைகள் சர்வதேச முக்கிய நிறுவனங்களிலும், ஏல கம்பெனிகளிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.

சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா நாட்டின் அதிகாரிகள் ஐந்து தொன்மையான சிலைகளை தமிழ்நாட்டிற்கு திரும்ப ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

அந்த அடிப்படையில் ஆஸ்திரேலியா நாட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எடுத்த சட்ட நடவடிக்கைகளினால் வழக்கு ஒன்றில் சம்மந்தப்பட்ட மூன்று தொன்மையான உலோக சிலைகளை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், கடுவன்குடி கிராமம், அருள்மிகு கைலாசநாதர் கோவிலை சேர்ந்த 46.0 செ.மீ உயரம், 29.0 செ.மீ அகலம் மற்றும் 55.0 செ.மீ. விட்டம் அளவுள்ள திரிசூல மங்கள காளி (பத்ரகாளி). அதன் விலை மதிப்பு சுமார் யூரோ. 190,000 ஆகும் (இந்திய ரூபாய் மதிப்பிற்கு ரூபாய் இரண்டு கோடியாகும் . அதே கோவிலை சேர்ந்த 80.5 செ.மீ. உயரம், 110.5 அகலம், 55.0 விட்டம் அளவுள்ள தொன்மையான நந்தி கற்சிலை (புனிதமான காளை). அதன் விலை மதிப்பு சுமார் அமெரிக்கா டாலர். 450,000

அதாவது இந்திய ரூபாய் மதிப்பிற்கு ரூபாய் நான்கு கோடி ஆகும்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா, மானம்பாடி கிராமம், அருள்மிகு நாகநாதசாமி கோவிலை சேர்ந்த 130.0 செ.மீ. உயரம், 110.0 செ.மீ. அகலம், 40.0 செ.மீ. விட்டம் அளவுள்ள ஆறு தலைகள் கொண்ட ஸ்கந்த-கார்த்திகேயன் (சுப்பிரமணியர்).

அதன் விலை மதிப்பு சுமார் யூரோ.180,000 அதாவது இந்திய ரூபாய் மதிப்பிற்கு ரூபாய் இரண்டு கோடி ஆகும்

இந்த 3 சிலைகளை ஆஸ்திரேலியாவின், கேன்பரா நகரின், நேஷ்னல் கேலரி ஆப் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிடம் முறையாக திரும்ப ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளது.

இதேபோல் அமெரிக்காவின் வாஷிங்கடன் டி.சி., ப்ரீர் சேக்லர் மியுசியம் என்ற இடத்தில் இருப்பதாக கண்டறியப்பட்ட தொன்மையான இரண்டு சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அமெரிக்காவிலிருக்கும் ஸ்மித்சோனியன் நிறுவனமான நேஷ்னல் மியுசியம் ஆப் ஏசியன் ஆர்ட்

ஒப்புக்கெண்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்கில் சம்மந்தப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் கிராமத்தில், சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அருள்மிகு நாரீஸ்வரர் கோயிலை சேர்ந்த 57.2 செ.மீ உயரம். 37.1 செ.மீ அகலம் 19 செ.மீ. விட்டம் அளவுள்ள, நாயனார் மற்றும் சுந்தரர்-பரவை நாச்சியார் எனும் புனித சுந்தரர் மற்றும் விக்கிரபாண்டியம் வழக்கில் சம்மந்தப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, ஆலத்துர் கிராமத்தில், 12-13ம் நூற்றாண்டை சார்ந்த, அருள்மிகு விஸ்வநாதசாமி கோயிலை சேர்ந்த 59.2 செ.மீ. உயரமுள்ள சோமஸ்கந்தர் ஆகியவற்றை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

சிலை தடுப்பு பிரிவில் கிடைத்த புகாரில் அடிப்படையில் அப்போதைய விழுப்புரம் மாவட்டம், தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் கிராமத்தில் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜேந்திர சோழ மன்னனால் கட்டப்பட்ட நாரீஸ்வரர் கோயில் வரலாற்று சிறப்புடையது என்றும், அந்த கோயிலில் தொன்மையான சிலைகள் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சிலைகளை வெற்றிகரமாக கண்டு பிடித்து, உரிய ஆதாரங்களை அளித்து மீண்டும் திருப்பிக் கொண்டுவந்தற்கு முயற்சிகள் செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிக காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் கல்பனா நாயக் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் பாராட்டினார்.

Hindusthan Samachar / P YUVARAJ