தென்காசி மாவட்டத்தில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
தென்காசி, 15 பிப்ரவரி (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணியானது நடைபெற்ற நிலையில், இன்றைய தினம் அதற்கு அடுத்த கட்டமாக நிலத்தில் வாழும் பறவைகள் கணக்கெடுக்கும் பனியானது தொடங்கிய நடைபெற்று வர
Survey


தென்காசி, 15 பிப்ரவரி (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணியானது நடைபெற்ற நிலையில், இன்றைய தினம் அதற்கு அடுத்த கட்டமாக நிலத்தில் வாழும் பறவைகள் கணக்கெடுக்கும் பனியானது தொடங்கிய நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, இன்றும், நாளையும் நடைபெற உள்ள இந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணியானது தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள இயற்கை நிறைந்த பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், இந்த பணியில் தென்காசி மாவட்டத்தில் உள்ள வன ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று தொலைநோக்கி உதவியுடனும், நேரிலோ பறவைகளை பார்த்து கணக்கிட்டு வருகின்றன.

மேலும், இந்த கணக்கெடுப்பின்போது கண்டறியப்பட்ட பறவை இனங்கள் குறித்த முழுமையான அறிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN