Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 15 பிப்ரவரி (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதுங்காமூர் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் மிக பழமை வாய்ந்த புத்திரகாமேன்டீஸ்வரர் பெரியநாயகி அம்பாள் திருக்கோவிலாகும்.
இங்கு மாசிமாதம் சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கும் பார்வதியம்மாளுக்கும் நான்கு கால சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபஆராதனை நடைபெருவது வழக்கம்.
இந்த சிவராத்திரியை முன்னிட்டு வழக்கமாகவே கோவில்வளாகத்தில் பக்தியை குறிக்கும் வகையில் ராட்சத ஓவியம் வரைவது வழக்கம்.
இதனை தொடர்ந்து 26வது இவ்வாண்டில் 03டன் உப்பும் மற்ளும் 01டன் வண்ணபொடிகளும் இணைத்து 40அடி உயரத்திலும் 30அடி அகளத்திலும்மாக புதுச்சேரி யூனியன்பிரதேசத்தில் உள்ள காரைக்கால் மாவட்டம் சிவனை நாரை வழிபட்ட சிறப்புடைய திரு நாரையூர் பார்வதீஸ்வரர் திருக்காட்சியான ஓவியத்தை வரைந்து பக்தர்களுக்கு காட்சிப்படைத்தனர்.
இந்த சிவனின் காட்சியில் மேலும் (திருமுறைகள் ஓலைச்சுவடிகளாக கிடைக்கப்பெற்ற சிறப்புடைய திருத்தலம்) குறித்தான பக்தி ஆலையத்தை ராட்சத ஓவியத்தை சிவனடியார்கள் ஏற்ப்பாட்டால் 2ஓவிய ஆசிரியர்கள் மற்றும் 15 நாட்டுநலப்பணி மாணவமாணவர்கள் பங்கேற்றனர்.
சுமார் 8மணிநேரங்களில் சிவன் ஓவியத்தை வரைந்து பக்தர்களுக்கு காட்சிப்படுத்தினர்.
இந்த ஓவியத்தை ஏராளமான பக்தர்கள் பார்த்து அதனை வழிபட்டனர்.
Hindusthan Samachar / Durai.J