போக்குவரத்து நெரிசலில் சிக்கிய டிடிவி தினகரன் வாகனம் - 1 மணி நேரமாக போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து சென்றது
மதுரை, 15 பிப்ரவரி (ஹி.ச.) மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் அமமுக பிரமுகர் பாலச்சந்திரன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு நவீன், ரிஷிகா தம்பதியின் திருமணத்தை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி
K


மதுரை, 15 பிப்ரவரி (ஹி.ச.)

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் அமமுக பிரமுகர் பாலச்சந்திரன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு நவீன், ரிஷிகா தம்பதியின் திருமணத்தை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

திருமணத்தை முடித்துவிட்டு மீண்டும் மதுரை செல்லும் போது, உசிலம்பட்டி நகர் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் டிடிவி தினகரன் சிக்கினார்.

சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நின்ற வாகனங்களில் ஊர்ந்தவாரே டிடிவி தினகரன் வாகனம் ஒரு மணி நேரமாக கடந்து சென்றது.

மாசி சிவராத்தரி திருவிழாவை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியில் உள்ள குல தெய்வ கோவில்களுக்கு தென்மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் உசிலம்பட்டியை நோக்கி படையெடுத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / Durai.J