தவெக கொள்கை விளக்க கூட்டத்தில் மின்சாரம் துண்டிப்பு
புதுக்கோட்டை, 15 பிப்ரவரி (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கொள்கை விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மத்திய மாவட்ட தலைவர் பர்வேஸ், தலைமை கழக வழக்கறிஞர் பிரிவ
மின்சாரம் துண்டிப்பு


புதுக்கோட்டை, 15 பிப்ரவரி (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கொள்கை விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்ட

உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மத்திய மாவட்ட தலைவர் பர்வேஸ், தலைமை கழக

வழக்கறிஞர் பிரிவு சத்திய குமார் மற்றும் லயோலோ மணி உள்ளிட்டர் கலந்து

கொண்டனர்.

இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது விராலிமலை பகுதியில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அதன் பிறகு பேசிய புதுக்கோட்டை மத்திய மாவட்ட தலைவர் பர்வேஸ்,

நையினார் நாகேந்திரன்

ஒரு நாகரீகம் இல்லாத பேச்சை பேசி வருகிறார்.

ஒரு கவுன்சிலர் கூட இல்லை என்று சொல்கிறீர்கள் ஆனால் உங்கள் பாஜக வேட்பாளர்

வெறும் 14 ஓட்டுகள் தான் வாங்கி உள்ளார்.

நானும் ஒரு கவுன்சிலர் தான் என அதற்கான ஆதாரத்தை காண்பித்தார்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் 2026 இல் மக்கள் இதற்கு பாடம்

புகட்டுவார்கள்.

ஒரு பொதுக்கூட்டம் நடைபெறும் போது எவ்வாறு இவர்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க மனம் வந்தது

என்றும் பேசினார்.

விராலிமலை செக்போஸில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam