Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 15 பிப்ரவரி (ஹி.ச.)
தென் கைலாயம் என போற்றப்படும் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஏற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில்,
இன்று ( பிப்ரவரி 15 ஆம் தேதி) மகா சிவராத்திரி என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வெள்ளியங்கிரி ஏழாவது மலையில் இருக்கும் சுயம்பு லிங்கத்திற்கு இன்று காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த நிலையில் சிவ பக்தர்களின் விருப்பதளங்களில் முதன்மையான பூண்டி வெள்ளியங்கிரி மலையில் எழுந்தருளிய வெள்ளியங்கிரி சுயம்பு லிங்கத்துக்கு பூஜை செய்து, வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.
வழக்கமான நாட்களை விட இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN