மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழப்பு - தேடுதல் வேட்டையில் காவல்துறை
விழுப்புரம், 15 பிப்ரவரி (ஹி.ச.) விழுப்புரம் அருகே மது போதையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த
Villupuram


விழுப்புரம், 15 பிப்ரவரி (ஹி.ச.)

விழுப்புரம் அருகே மது போதையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார். கூட்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபான மதுபான கடை அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது அய்யனாருக்கும், மாற்று சமூகத்தை சேர்ந்த இரண்டு நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

அப்போது அய்யனாரை பலமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். மேலும், உடலை தீவைத்து எரித்துள்ளனர்.

இதனையறிந்து உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகளை விரைந்து கைது செய்வோம் என காவல்துறை கூறியதை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN