Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 16 பிப்ரவரி (ஹி.ச.)
சமீபத்தில் திருப்பதி சென்ற இபிஎஸ் வேட்பாளர் பட்டியலை வெங்கடாசலபதி பாதத்தில் வைத்து தரிசனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டிலேயே முதலில் விருப்பனு கொடுத்து நேர்காணல் நடத்தி முடித்தது அதிமுகதான்.
கூட்டணியையும் இறுதி செய்து, தொகுதி பங்கீடையும் ஏறத்தாள முடிக்கப்பட்டுவிட்ட நிலையில்... இன்னும் அதிகார பூர்வமான மட்டும் அறிவிக்காமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17ல் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல் அமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளுக்கு முன்னதாக கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீட்டையும் முடிவு செய்து, எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை திட்டமிட அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.
ஜெயலலிதா பிறந்தநாள் அன்று கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பட்டியலையும், அதிமுக வேட்பாளர்களின் முதல் பட்டியலையும் வெளியிட்டு அதிரடி காட்ட கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திட்டமிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று வேட்பாளர் அறிமுகம் செய்வது ஜெயலலிதாவின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இருக்கலாம். ஜெயலலிதா அவர்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிடும்போது நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து தான் வெளியிடுவார்கள்.
அது போல் பழனிச்சாமியும் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று வெளியிட முடிவு செய்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam