அர்ஜூன் சம்பத் மீது தீடிரென பிடிவாரண்ட்
சேலம், 16 பிப்ரவரி (ஹி.ச.) கடந்த 2022 ஆம் ஆண்டு, பஞ்சாப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி நடந்ததாக, கடந்த 2022-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் இந்துக்களின் அர்ஜூன் சம்பத் தலைமையில் சே
A


சேலம், 16 பிப்ரவரி (ஹி.ச.)

கடந்த 2022 ஆம் ஆண்டு,

பஞ்சாப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி நடந்ததாக,

கடந்த 2022-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் இந்துக்களின் அர்ஜூன் சம்பத் தலைமையில் சேலம் இரயில் நிலையத்தில் இரயில் மறியல் நடத்தினர்.

இதில் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் 20 -க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

அந்த வழக்கில் இன்று அர்ஜூன் சம்பத் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது தீடிரென பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது

சேலம் மாவட்டம் இரண்டாவது நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் தளர்த்த கோரி நீதிபதி முன்பு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆஜாராகி உள்ளார்.

Hindusthan Samachar / Durai.J