இன்று வாங்க வேண்டிய மலிவு விலை பங்குகள்
சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.) சர்வதேச சந்தையின் தடுமாற்றம், செயற்கை நுண்ணறிவின் அதீத தாக்கம் பற்றிய பீதி காரணமாக பிப்ரவரி 13 அன்று இந்திய பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சி அடைந்தன. சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் சரிந்து 82,626.76 என்ற நிலையில் முடிவடைந்தன.
இன்று வாங்க வேண்டிய மலிவு விலை பங்குகள்


சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.)

சர்வதேச சந்தையின் தடுமாற்றம், செயற்கை நுண்ணறிவின் அதீத தாக்கம் பற்றிய பீதி காரணமாக பிப்ரவரி 13 அன்று இந்திய பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சி அடைந்தன.

சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் சரிந்து 82,626.76 என்ற நிலையில் முடிவடைந்தன. அதே நேரத்தில் நிஃப்டி 336 புள்ளிகள் சரிந்து 25,471.10 என நிலைபெற்றது.

இந்த சூழலில், இந்த வாரம் பங்குச் சந்தையில் எந்த பங்குகளை வாங்கலாம் என சாய்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுமீத் பகாடியா சில பங்குகளை பரிந்துரைத்துள்ளார்.

அதாவது ஆதித்யா பிர்லா ஃபேஷன் மற்றும் சில்லறை விற்பனை, ஐஎஃப்சிஐ மற்றும் சவுத் இந்தியன் வங்கி பங்குகளை வாங்கலாம் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆதித்யா பிர்லா ஃபேஷன் மற்றும் சில்லறை விற்பனை பங்கினை ரூ.73.8க்கு வாங்கலாம். இதன் இலக்கு விலை ரூ.79.5 ஆகவும், ஸ்டாப்லாஸ் ரூ. 71.5 ஆகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

ஐஎஃப்சிஐ பங்கினை ரூ.62.87க்கு வாங்கலாம். இதன் இலக்கு விலை ரூ.68 ஆகவும், நஷ்டத்தை கட்டுப்படுத்தும் ஸ்டாப் லாஸ் ரூ.60 ஆகவும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சவுத் இந்தியன் வங்கி பங்கினை ரூ.40.95க்கு வாங்கலாம்.

இதன் இலக்கு விலை ரூ.44 ஆகவும், ஸ்டாப் லாஸ் ரூ.39.5 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM