செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 காடுகளில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது
செங்கல்பட்டு, 16 பிப்ரவரி (ஹி.ச) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 வனச்சரகங்களில் நிலவாழ் பறவைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் இந்த ஆண்டிற்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில், வனத்துறை அலுவலர்கள்,தன்னார்வலர்கள், மாணவர்கள் என 100 கும் மேற்பட்ட நபர
Bird


செங்கல்பட்டு, 16 பிப்ரவரி (ஹி.ச)

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 வனச்சரகங்களில் நிலவாழ் பறவைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் இந்த ஆண்டிற்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

இதில், வனத்துறை அலுவலர்கள்,தன்னார்வலர்கள், மாணவர்கள் என 100 கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்றனர். பைனாகுலர் மற்றும் அதி நவீன கேமராக்கள் மூலம் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது.

இந்தக் கணக்கெடுப்பின்போது, ஏசியன் கிரீன் பி ஈட்டர், இன்டியன் ராபின், இன்டியன் பாரடைஸ் பிளைஈட்டர், இன்டியன் நைட் ஜார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பறவை வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த விபரங்கள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் நடந்த இந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி குறித்த விபரங்கள் மொத்தமாக அரசால் வெளியிடப்படும்.

கடந்த ஆண்டு டிச. 27, 28ம் தேதிகளில், நீர் நிலை பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / P YUVARAJ