Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் சென்னையை அடுத்த ஶ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
அதன்பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்த மத்திய அரசு, அதற்கு இந்தியாவில் செயல்பட தடை விதித்தது. இந்தத் தடை 1991ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான தடையை கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு நீட்டித்தது. இதனையடுத்து, தமிழ் ஈழம் தொடர்பாக விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டை சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றாத நிலையில், தொடரும் தடை நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு தொடரப்பட்டு நிலுவையில் இருந்த இந்த வழக்கு, நீதிபதிகள் அனிதா சுமந்த், மும்மினேனி சுதிர் குமார் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜரான நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில், மூத்த வழக்கறிஞர் காணொலியில் ஆஜராகி வாதம் செய்ய தயாராக இருப்பதாகவும் அதற்காக வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்தார்.
அப்போது வைகோ, வழக்கை வரும் 26ஆம் தேதி இறுதி விசாரணைக்கு ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை பிப்ரவரி 26 பிற்பகல் 2.15 மணிக்கு இறுதி விசாரணைக்காக ஒத்திவைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
தமிழ் ஈழ விடுதலை புலிகள் மீதான தடையை மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டித்தது.
பின்னர், 2 ஆண்டுகள் தடையை 5 ஆண்டுகளாக அதிகரித்ததை எதிர்த்து, 2013ஆம் ஆண்டு நான் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். டெல்லியில் உள்ள தீர்ப்பாயத்திலும் ஆஜராகி தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறேன்” என்றார். வந்தே மாதரம் பாடல் குறித்து பேசிய வைகோ, ”வந்தே மாதரம் பாடலில் உள்ள வரிகளில், சில வரிகள் பிற மதத்தவர்களுக்கு எதிராக உள்ளது. அதில் இந்து மதத்தை ஏற்பதாக உள்ளதை அவர்கள் எப்படி ஏற்பார்கள். இதனால், மத நல்லிணக்கம் பாதிக்கப்படும்.
மத்திய அரசு சனாதன இந்து தர்மத்தை சிறுபான்மை மக்கள் மீது திணிக்க முயற்சிக்கின்றனர். ஆங்கிலேயர்களிடம் கோரிக்கை வைத்த தேச துரோகி சாவர்க்கர் படத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திறந்து வைத்துள்ளது. ஆனால், சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படம் திறக்கப்படாததை எதிர்த்து நடத்தப்பட்ட நீண்ட போராட்டத்துக்கு பிறகு, அவரது அம்கேத்கரின் புகைப்படம் நாடாளுமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா வளர்த்த திராவிடத்தை அடியோடு அழிப்போம் என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். பாரதியாரின் பாடல்களை தமிழ் பேசுவதாக பிரதமர் வேசம் போட்டு வருகிறார் என கூறினார்.
சட்டமன்ற தேர்தல் குறித்து பேசுகையில், “வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். மதிமுக அதற்கு உறுதுணையாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி என்பது தவிடு பொடியாகும்.
நடிகை குறித்து பேச்சை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவிர்த்திருக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை வெறும் வெற்றுக் கூச்சலாகவே இருக்கும் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN