Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களால் வாய் பேச முடியாத காரணத்தால் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கும் வகையில் விசில் ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1500 ரூபாயாக உள்ள உதவித்தொகையை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுக்க வேண்டும். அரசு அலுவலகங்கள், மருத்துவமனை, காவல் நிலையங்களில் மொழி பெயர்ப்பாளர்கள். தொகுப்பு வீடு அனைவரும் வழங்க வேண்டும். மத்திய அரசு ஒப்புதல் அளித்தும் ஓட்டுனர் உரிமம் வழங்க ஒப்புதல் வழங்கப்படாமல் உள்ளது அதை வழங்க வேண்டும் . முதலமைச்சரின் ஆலோசனை வாரிய குழுவில் எங்களின் உறுப்பினரை நியமனம் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் முகாம் அனைத்தும் ஒரே இடத்தில் செயல்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளாக இருப்பதால் இந்த உதவி தொகை பெறுபவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடையாது என்று சொல்வது நியாயம் இல்லை மாற்றத்திறனாளிகள் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் 7 ஆண்டுகளுக்கு காது கேளாத ரம்யா என்ற பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்ற நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடும் வழங்கவில்லை வன்கொடுமை செய்த நபரை கைது செய்யவும் இல்லை அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பாதகைகளை ஏந்தி விசில் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் இந்த அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ