Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் (ETM) எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், தற்போது மின்னணு பயணச்சீட்டுகளை வழங்குவதில் தற்காலிகத் தடை ஏற்பட்டது.
இதன் காரணமாக, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் வரை நடத்துனர்கள் மூலமாக காகிதத்திலான கைமுறை (Manual) பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இக்காலக்கட்டத்தில் UPI, NCMC கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்பதையும், 'சென்னை ஒன்'
(Chennai One App) செயலி தற்காலிகமாகச் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு பயணிகள் வழக்கம் போல் யுபிஐ உள்ளிட்ட பரிவர்த்தனைகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam