இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க தகுதியானவர் ஸ்டாலின் - மணிசங்கர் ஐயர்
கேரளா, 16 பிப்ரவரி (ஹி.ச.) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ''விஷன் 2031'' சர்வதேச கருத்தரங்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பங்கேற்றார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது: ''இந்தியா'' கூட்டணியை வலு
மணிசங்கர் ஐயர்


கேரளா, 16 பிப்ரவரி (ஹி.ச.)

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 'விஷன் 2031' சர்வதேச கருத்தரங்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பங்கேற்றார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது:

'இந்தியா' கூட்டணியை வலுவாக ஒருங்கிணைக்க வேண்டும் என்றால், அதற்கு மிகச்சிறந்த நபர் மு.க. ஸ்டாலின் தான் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

முன்பு ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு காமராஜரை பிரதமர் ஆகச் சொன்னபோது, அவர் ஒரே வரியில் பதில் சொன்னார்.

எனக்கு ஆங்கிலமும் தெரியாது, ஹிந்தியும் தெரியாது. பின் எப்படி?

இன்று ஸ்டாலினும் அதே போன்ற ஒரு சூழலில் தான் இருக்கிறார். ஆனால், ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு, இந்தக் கூட்டணியை முழுநேரமும் ஒருங்கிணைக்க ஒரு ஆளுமை தேவை.

ஸ்டாலின் வெறும் 'சௌகிதார் சோர் ஹை' என்றோ, 'சூட் பூட் சர்க்கார்' என்றோ வெற்று அரசியல் கோஷங்களை எழுப்புபவர் அல்ல.

கடந்த ஓராண்டாக அவர் பேசி வரும் ஒவ்வொரு விஷயமும் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு வலுசேர்ப்பதாகவே இருக்கிறது.

அவர் தேவையில்லாத முழக்கங்களை முன்வைக்காமல், தேசத்திற்குத் தேவையான உண்மையான பிரச்சினைகளை மட்டுமே கையிலெடுக்கிறார்.

எனவே, 'இந்தியா' கூட்டணியின் தலைவராக இருக்க அவரே தகுதியானவர்.

ராகுல் காந்தி பிரதமராவதற்கு அவர் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கமாட்டார்.

மாறாகப் பின்னால் இருந்து கூட்டணியைத் தாங்கிப் பிடிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam